தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வடமதுரை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

திண்டுக்கல் அருகே உள்ள திம்மண்ணலூர் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரராஜா. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ராஜேஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு வடுகப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனால் ராஜேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி பரிதாபமாக உயரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com