தூக்குப்போட்டு பெண் தற்கொலை

கணியம்பாடி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே மோத்தக்கல் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் குமரகுரு (வயது 50). இவரது மனைவி அமலு (43).

அமுலு கடந்த 6 மாதங்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குணமடையவில்லை.

இந்த நிலையில் அவர் தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com