பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ராமநத்தம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராஜாராம்(வயது 30). இவருக்கும் அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் மகள் கவுசல்யா(27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கவுசல்யா, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டாகள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com