பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே உள்ள குதிரைப்பந்திவிளையை சேர்ந்தவர் குமரேசன் ஆசாரி (வயது 64). இவருடைய மனைவி கோசலா (61). இவர்கள் மகன் பரமேசுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் கோசலா கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் கோசலா வீட்டில் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து காண்டார். இதுகுறித்து உறவினர்கள் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com