தூக்குப்போட்டு பெண் தற்கொலை

சோளிங்கர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகுமார். இவரது மனைவி பிரேமலதா (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஹரிகுமார் சோளிங்கரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஹரிகுமார் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த பிரேமலதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com