அரசு மருத்துவமனையில் கருத்தரித்தல் மையம் - வழக்கு முடித்து வைப்பு


அரசு மருத்துவமனையில் கருத்தரித்தல் மையம் - வழக்கு முடித்து வைப்பு
x

கருத்தரித்தல் மையங்களை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை அறிவுறுத்தி உள்ளது.

மதுரை,

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் ஏற்படுத்த கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் அமைக்கும் நடவடிக்கையை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது. மக்களின் நலன் கருதி கருத்தரித்தல் மையங்களை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

1 More update

Next Story