தமிழகத்தில் உர விற்பனை 40 சதவீதம் சரிவு

தென்மேற்கு பருவமழை குறைவு, காவிரியில் தண்ணீர் வராதது ஆகியவற்றால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதாக வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உர விற்பனை 40 சதவீதம் சரிவு
Published on: 

சென்னை,

தமிழகத்தில் நடப்பாண்டில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் பல பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் யூரியா, டி.ஏ.பி., உள்ளிட்ட உரங்களின் விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளது என வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்காசிய போர்

இது குறித்து வினியோகஸ்தர்கள் கூறுகையில், “மேற்காசிய போரால் கடந்த ஏப்ரல் மாதத்தில் உர வினியோகமும், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பற்றாக்குறை வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் பலர் கூடுதலாக உரங்களை வாங்கி இருப்பு வைத்தனர்.

குறுவை சாகுபடி

ஆனால், தென்மேற்கு பருவமழை குறைவு, காவிரியில் தண்ணீர் வராதது ஆகியவற்றால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. அதிக மழை பெய்யும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உர விற்பனை என சீராகும் எதிர்பார்த்தோம். வட கிழக்கு பருவமழை ஓரளவுக்கு பெய்தாலும், அது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

விற்பனை சரிவு

ஒவ்வொரு வினியோகஸ்தரிடமும் 10-20 சதவீதம் கூடுதலாகவே உர இருப்பு உள்ளது. இதனால் துறைமுகங்களில் லட்சம் டன் உரம் தேங்கி கிடக்கிறது. உர நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்துள்ளன. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், உர விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளது. வரும் நாட்களில் அதிக மழை பெய்தால் மட்டுமே விற்பனை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

X