கலைத்திருவிழா போட்டிகள்

கடையநல்லூரில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
கலைத்திருவிழா போட்டிகள்
Published on

கடையநல்லூர்:

தென்காசி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது. கடையநல்லூர் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்று பேசினார்.

தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அருளானந்தன், புதுக்குடி ஊராட்சி தலைவர் இ.கஸ்தூரி இன்பராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜா.சுகந்தி மற்றும் பலபத்திரராம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தனக்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதில் 1500-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முடிவில், மாவட்ட உதவித்திட்ட அலுவலர் சீவலமுத்து நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com