கள உதவியாளர் உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு மின்சார வாரியம் அறிவிப்பு

கள உதவியாளர் உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு மின்சார வாரியம் அறிவிப்பு.
கள உதவியாளர் உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு மின்சார வாரியம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2 ஆயிரத்து 900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15-ந்தேதியில் இருந்து மார்ச் 16-ந்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்பதவிக்கான உடல் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதாலும், தமிழக அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும், உடல் தகுதி தேர்வு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. உடல் தகுதி தேர்வு நடைபெறும் நாள் www.tangedco.gov.in என்ற இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் பின்னர் அறிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com