பள்ளி மாணவர்களுக்கான களப்பயணம்

விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான களப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான களப்பயணம்
Published on

விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் தமிழக அரசு அறிவித்த நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார். அரசு பள்ளிகளின் சார்பாக ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர்கள் காங்கேயன், வீரமணி மற்றும் வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரஸ்வதி ஒருங்கிணைத்து நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com