களப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

களப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் இன்று (திங்கட் கிழமை) முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
களப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தன்னலம் கருதாது களப்பணியாற்றுகின்ற, பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை மற்றும் அனைத்துத்துறை பணியாளர்களுக்கும், நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கத் தேவையான முகக் கவசங்களும், உரிய பாதுகாப்பு உடைகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வரும் மேற்கண்ட அனைத்துத்துறை களப் பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, ஜிங்க் மாத்திரைகளும், மல்டி வைட்டமின் மாத்திரைகளும் 27-ந்தேதி (இன்று) முதல் 10 நாட்களுக்கு அ.தி.மு.க. அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com