உடுமலை அருகே யானைகளுக்குள் சண்டை - ஆண் யானை சாவு


உடுமலை அருகே யானைகளுக்குள் சண்டை -  ஆண் யானை சாவு
x

கோப்புப்படம்

உடுமலை அருகே 14 வயது ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

திருப்பூர்,

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தைப் புலி, மான், செந்நாய் போன்ற விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குளிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதியில் வன அலுவலர்கள் ரோந்து சென்ற போது யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. இரண்டு யானைகள் இடையே நடந்த சண்டையின் போது அதிக காயம்பட்ட இந்த யானை இறந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் உடுமலை வனத்துறை அலுவலர் வாசு, வன அலுவலர்கள் யானையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

1 More update

Next Story