தம்பியுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் சண்டை: 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

மாணவிக்கும் அவரது தம்பிக்கும் பிஸ்கட் சாப்பிடுவதில் சண்டை ஏற்பட்டுள்ளது.
தம்பியுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் சண்டை: 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாச்சி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நகுலன். அவரது மகள் ரிச்சியா (15 வயது). இவர், சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் ரிச்சியாவிற்கும் அவரது தம்பி ரித்திகனுக்கும் பிஸ்கட் சாப்பிடுவதில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருக்கொருவர் தங்களது காலணிகளை சேதப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரிச்சியா சம்பவத்தன்று தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதைக் கண்ட உறவினர்கள் ரிச்சியாவை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com