அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. அதன்படி 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செய்யப்பட்டன.

அதன் பிறகு அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28-ந்தேதி வரை பெறப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நவம்பர் 29-ந்தேதி முதல் கடந்த 24-ந்தேதி வரை பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இருக்கின்றனர். 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 பெண் வாக்காளர்களும், 9 ஆயிரத்து 120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரத்து 958 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 45 ஆயிரத்து 184 பேர், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 45 ஆயிரத்டு 645 பேர். மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் 291 பேர்.

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தமிழகத்தில் குறைந்த வாக்காளர்களை கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 505 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 86 ஆயிரத்து 456 பேர், பெண் வாக்காளர்கள் 90 ஆயிரத்து 45 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேர்.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 78 ஆயிரத்து 980 உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com