

சென்னை
தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பேசிய போது நிதியமைச்சர் வெளியேறிவிட்டார்; இது எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்தும் செயல். ஓ, பன்னீர் செல்வம் கருத்துக்கு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளியேறுவதா? அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தை நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார்
2011 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் வெளியான அறிவிப்புகளின் உண்மை நிலையை முதல்-அமைச்சர் மறைத்துவிட்டார். நிதியமைச்சர் தந்த புத்தகத்தில் அதன் உண்மை நிலை இடம்பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.