இருளர் இன மக்களுக்கு நிதி உதவி

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் இருளர் இன மக்களுக்கு, கலெக்டர் வளர்மதி நிதி உதவி வழங்கினார்.
இருளர் இன மக்களுக்கு நிதி உதவி
Published on

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கடன்உதவி, ஈலவச வீடுகள், குடிநீர் வசதி வேண்டி மனு கொடுத்தனர். மொத்தம் 283 மனுக்களை பொது மக்களிடம் இருந்து பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

நிதி உதவி

மேலும், கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து இருளர் இன மக்கள் 12 நபர்களுக்கு நலிந்தோர் நிதியுதவி, குடிசை வீடு மாற்று நிதியுதவி, சுய தொழில் நிதியுதவி, திருநங்கை சுயதொழில் நிதியுதவி உள் என ரூ.64 ஆயிரம் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com