பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்,
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

விருதுநகர் மாவட்டம் வடகரை கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காரியாட்டி வட்டம், கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (வயது 54) க/பெ.ரவி மற்றும் தண்டியனேந்தலைச் சேர்ந்த கருப்பையா (வயது 37) த/பெ.அய்யணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன் (வயது 55), முருகன் (வயது 40), மாரியம்மாள் (வயது 40) மற்றும் பேச்சியம்மாள் (வயது 38) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com