பணியின்போது உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவாரூர் மாவட்டத்தில் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த பெருகவாழ்ந்தான் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த M.ராஜேந்திரன் (வயது 52) என்பவர் கடந்த 5.4.2025 அன்று பணியின் நிமித்தமாக மண்ணுக்குமுண்டான் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்போது திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மயக்கமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள சித்தமல்லி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com