பழுதடைந்த தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 லட்சம் வரை நிதி உதவி - கலெக்டர் தகவல்

பழுதடைந்த தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பழுதடைந்த தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 லட்சம் வரை நிதி உதவி - கலெக்டர் தகவல்
Published on

தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்குவதற்கு தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும். கட்டிடம் கட்டப்பட்ட ஆண்டை கணக்கில் கொண்டு மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்.

தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல், தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்

10-15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1. லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2. லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேலிருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து 6 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுபெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து தேவாலயங்களை தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு போன்றவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com