தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த நிதி நிறுவன ஊழியர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வி.இ.ரோடு, ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் பாலகணேஷ் (வயது 27), ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அவரது தாயார் விஜயலட்சுமி மற்றும் அக்கா இருவரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று விட்டனர். அவரது தந்தை குருசாமி வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த பாலகணேஷ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி வழக்குப்பதிவு செய்தார். பாலகணேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்ஸ்பெக்டர் திருமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story