நிதி நிறுவன ஊழியர் சாவு

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நிதி நிறுவன ஊழியர் சாவு
Published on

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை பெரிய தைக்கால் தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 55). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ந்தேதி மதியம் வீரமணி தனது வீட்டின் மாடியில் ஓய்வு எடுத்துவிட்டு கீழே இறங்கி உள்ளார். அப்போது மாடி படிக்கட்டுகளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com