அரசு பஸ் மோதிநிதி நிறுவன ஊழியர் பலி

அரசு பஸ் மோதிநிதி நிறுவன ஊழியர் பலியானார்
அரசு பஸ் மோதிநிதி நிறுவன ஊழியர் பலி
Published on

சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் சுண்ணாம்புக்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 33). நிதி நிறுவன ஊழியரான இவர் நேற்று இரவு மொபட்டில் சுண்ணாம்புக்காரன் பட்டியிலிருந்து அல்லித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது தோகைமலையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com