‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்; மத்திய-மாநில அரசுக்கு, சரத்குமார் வலியுறுத்தல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்; மத்திய-மாநில அரசுக்கு, சரத்குமார் வலியுறுத்தல்
Published on

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் 19 வயதான மகன் தனுஷ் நீட் தேர்வு பயம், விரக்தியால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் வேதனை அளிக்கிறது.நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்த அரசு, சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் துரிதமாக தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.

பொதுத்தேர்வு ரத்து செய்தநிலையில், நீட் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்ற மத்திய அரசின் பிடிவாதத்தால் மாணவ-மாணவிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த அவலநிலைகள் மாறவும், உயிரிழப்புகளை தவிர்க்கவும் மத்திய-மாநில அரசுகள் நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com