தர்மபுரி மாவட்டத்தில்மது போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்

தர்மபுரி மாவட்டத்தில்மது போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்
Published on

தர்மபுரி மாவட்டத்தில் மது போதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது தர்மபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம், உட்கோட்ட பகுதிகளில் மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த 71 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 20 பேர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 பேர், பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com