அரசு கல்லூரியில் நுண்கலை மன்ற விழா

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் நுண்கலை மன்ற விழா நடந்தது.
அரசு கல்லூரியில் நுண்கலை மன்ற விழா
Published on

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் சிறப்பு நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பீர்கான் தலைமை தாங்கினார். துறை தலைவர்கள் ஜெயா, மோகனகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுண்கலை மன்ற தலைவர் பிரேம்சந்தர் வரவேற்றார். நிகழ்ச்சியில் சுரண்டை வியாபாரிகள் சங்க நிர்வாகி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். துறை தலைவர்கள் சக்திவேல், சரவணன், பேராசிரியர் வீரபுத்திரன், கவுரவ விரிவுரையாளர்கள் சித்திரைக்கனி, ஹரிஹரசுதன், ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் கல்லூரி அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது முடிவில் தமிழ்த்துறை தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். ஏற்பாடுகளை நுண்கலை மன்ற நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com