சிறு தானிய புகைப்பட கண்காட்சி

குன்னூரில் சிறு தானிய புகைப்பட கண்காட்சி தொடங்கியது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்றார்.
சிறு தானிய புகைப்பட கண்காட்சி
Published on

குன்னூரில் சிறு தானிய புகைப்பட கண்காட்சி தொடங்கியது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்றார்.

புகைப்பட கண்காட்சி

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் சர்வதேச சிறு தானிய ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும் மக்கள் நல திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது.

கட்டுரை போட்டி

இதன் தொடக்க விழாவில், கண்காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் கட்டுரை போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார். விழாவில் சென்னை மத்திய தகவல் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார்.

நோய்களுக்கு தீர்வு

பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் பேசும்போது, இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் ஒரு காலத்தில் உணவாக இருந்தது. வாழ்க்கை முறை மாற, மாற சிறுதானியங்களும் நம்மை விட்டு அகன்று விட்டன. தற்போது பல ஆராய்ச்சிகளில் சிறு தானியங்கள் வாழ்வியல் நோய்களுக்கு தீர்வாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், பழங்குடியினர் கலந்து கொண்டனர். சிறு தானியங்கள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com