ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம்: போக்குவரத்து துறை எச்சரிக்கை


ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம்: போக்குவரத்து துறை எச்சரிக்கை
x

தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

”நாளை சுதந்திர தினம் 15.08.2025 மற்றும் அரசு வார விடுமுறையைத் தொடர்ந்து பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனை சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்து மற்றும் அனுமதிக்குப் புறம்பாக இயக்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story