கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1 2026 முதல் தற்காலிகமாக தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு
Published on: 

சென்னை,

எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ / தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அன்ன யோஜனா

மத்திய அரசு, 6 மாதங்களுக்கு மேல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை (PHH) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1 2026 முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்

தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை சதவீதம் 96.6996 ஆகும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் 10.05.2026 45 02.08.2026, 08.08.2026, 09.08.2026, 29.08.2026, 19.09.2026 மற்றும் 26.09.2026 ஆகிய தேதிகளில் கைவிரல் ரேகை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

95.44 சதவீதம்

இந்த முகாம்கள் மூலமாக, ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த கைவிரல் ரேகை சரிபார்ப்பு. செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக 4,49,663 முன்னுரிமை (PHH) மற்றும் AAY திட்டப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

கைவிரல் ரேகை

எனினும் கைவிரல் ரேகை பணியினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள். நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, கைவிரல்ரேகை கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது கைவிரல் ரேகை தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com