கோபி அருகே வீட்டில் தீ விபத்து

கோபி அருகே வீட்டில் தீ விபத்து
கோபி அருகே வீட்டில் தீ விபத்து
Published on

கடத்தூர்

கோபி அருகே உள்ள காசிபாளையம் மதுரைவீரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பழனாள் (வயது 65). இவர் கூலி வேலை செய்து வருகிறார். பழனாள் வழக்கம் போல வேலைக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பு உள்ள மேற்கூரையில் கரும்புகை வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் முன்பு உள்ள மேற்கூரை மற்றும் வீட்டினுள் வைத்திருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com