சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து..!

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் தீ விபத்து..!
Published on

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அலுவலகத்தின் நான்காவது தளத்தில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இருப்பினும் விபத்து தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com