சென்னை: ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை: ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
Published on

சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் தீ பற்றி பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து 6 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com