உப்பளத்தில் தீ விபத்து

தூத்துக்குடியில் உப்பளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
உப்பளத்தில் தீ விபத்து
Published on

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் ஹட்லிமச்சாது என்பவருக்கு சொந்தமான உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் விளைந்த உப்பை ஓலைக் கொட்டகை அமைத்து அதில் சேகரித்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, அந்த ஓலைக் கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் ஓலை கொட்டகை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் சேமித்து வைத்து இருந்த உப்பும் சேதம் அடைந்தது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com