தேங்கி கிடந்த குப்பைகளில் தீப்பிடித்து புகைமூட்டம்

தேங்கி கிடந்த குப்பைகளில் தீப்பிடித்து புகைமூட்டம்
தேங்கி கிடந்த குப்பைகளில் தீப்பிடித்து புகைமூட்டம்
Published on

மன்னார்குடியில் மதுக்கூர் சாலை அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடம் தாழ்வான பகுதியாக இருந்ததால் குப்பைகள் முன்பு கொட்டப்பட்டு இருந்தது. தற்போது அந்த பகுதி சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் சில இடங்களில் தேங்கி கிடக்கும் மீதமுள்ள குப்பைகளில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. இதனால் கடும் புகைமூட்டம் உருவாகி அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். தகவல் அறிந்து 3 வண்டிகளில் தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி கட்டுப்படுத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com