கோவில்பட்டி அருகே 3 கடைகளில் தீ விபத்து - ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்...!

கோவில்பட்டி அருகே 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.
கோவில்பட்டி அருகே 3 கடைகளில் தீ விபத்து - ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்...!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாலாட்டின்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது சகோதரர் கோமதி. இருவரும் சர்வீஸ் சாலை பகுதியில் அடுத்தடுத்து சலூன் கடைகள் நடத்தி வருகின்றனர். சலூன் கடைகளுக்கு அருகே குருசாமி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் 3 கடையில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்த பொது மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

தீயை அணைத்த போதிலும் 3 கடைகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 பைக்குகள், கடையில் இருந்த டிவிகள், பிரிட்ஜ் உள்ளிட்ட சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

கோமதிக்கு சொந்தமான கடையில் பணிபுரியும் கார்த்தி என்ற இளைஞர் கடையில் தூங்கி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. தீ பிடித்து எரிய தொடங்கியதும், அதிக வெப்பம் ஏற்பட்டதால் விழித்து பார்த்த அவர், அங்கிருந்து வெளியே ஓடிவந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com