கடலூர் சோலார் பவர் பிளான்டில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனல்கள் சேதம்

சோலார் பேனல்கள் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீ விபத்து
Published on

வேப்பூர்,

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே டி.புடையூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக சோலார் பேனல்களை அடுக்கி வைத்திருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த சோலார் பேனல்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. சோலார் பேனல்கள் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீயணைப்பு வீரர்கள்

இதையடுத்து விருத்தாசலம், திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோலார் பேனல்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

தீ விபத்துக்கான காரணம் குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com