தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பெட்டி தொழிற்சாலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 45). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் தீப்பெட்டி ஆலையில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுபற்றி கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக தீப்பெட்டி ஆலையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஆலையில் உள்ள தீக்குச்சிகள் எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீயை அணைத்தனர்

தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், ஆலையில் இருந்த தீக்குச்சிகள் எரிந்து கருகின. தீப்பிடித்தது காலை நேரம் என்பதால் ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com