ஓட்டலில் தீ விபத்து

ஆம்பூரில் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
ஓட்டலில் தீ விபத்து
Published on

ஆம்பூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று மாலை மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஓட்டலில் தீ பற்றி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் ஓட்டல் முழுவதும் தீயில் கருகி உள்ளே இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்லநாதன், ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், ஆம்பூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். மேலும் கடை உரிமையாளருக்கு நிவாரண உதவியும் வழங்கினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com