தீப்பெட்டி தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலை அலுவலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாயின.
தீப்பெட்டி தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலை அலுவலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாயின.

தீப்பெட்டி தொழிற்சாலை

கோவில்பட்டியை அடுத்துள்ள திட்டங்குளம் சிட்கோ தொழிற்பேட்டையில் கோவில்பட்டி மில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 57) மற்றும் ராஜேந்திரன், முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையின் அருகே உள்ள அலுவலகத்தில் நேற்று காலை திடீரென அதிகளவில் புகைமூட்டம் வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் அலுவலக அறைக்கு சென்று பார்த்தபோது தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறை அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கம்பயூட்டர், லேப்டாப், பர்னிச்சர்கள், தீப்பெட்டி எந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

தீ விபத்து காலையில் நடந்ததால் பணியாளர்கள் யாரும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com