மதுரவாயலில் குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் தீ விபத்து; பெட்ரோல் கேன் சாய்ந்ததால் விபரீதம்

மதுரவாயலில் குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மதுரவாயலில் குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் தீ விபத்து; பெட்ரோல் கேன் சாய்ந்ததால் விபரீதம்
Published on

சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் உள்விளையாட்டு அரங்கில் முதல்முறையாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற குத்துசண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குத்துச்சண்டை வீரரான மதுரவாயல் பகுதியை சேர்ந்த பாலி சதீஷ்வர் என்பவர், இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு முன்பாக நெருப்பில் சாகசம் செய்து காட்டினார். எதிரில் இருந்து நெருப்பு பந்தை அவர் மீது தூக்கி வீச, அதனை அவர் கையால் தடுத்து தீயை அணைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார்.

அப்போது அருகில் வைத்து இருந்த பெட்ரோல் கேன் சரிந்து, நெருப்பு பந்தில் எரிந்த தீயில் சாந்து விழுந்தது. இதனால் குப்பென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதில் ஒருவருக்கு கையில் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றபோது, தரை முழுவதும் பெட்ரோல் கொட்டி தீ பரவியது.

இதனால் அங்கிருந்த குத்து சண்டை வீரர்கள் உள்பட அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தண்ணீர் மற்றும் ஈரமான கோணியை வைத்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தனியார் விளையாட்டு திடலில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள், ஏற்பாடுகள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com