அரசு பேருந்தில் தீ விபத்து - பயணிகள் 60 பேரின் நிலை என்ன?

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
அரசு பேருந்தில் தீ விபத்து - பயணிகள் 60 பேரின் நிலை என்ன?
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து சுதாரித்துக் கொண்ட பயணிகள், அலறியபடி பேருந்தில் இருந்து வெளியேறினர். இதனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் 60 பேர் உயிர்தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலையில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com