தீத்தடுப்பு ஒத்திகை

அரியலூரில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
தீத்தடுப்பு ஒத்திகை
Published on

அரியலூர் அருகே உள்ள இலிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம் அரசு உதவி பெறும் கே.ஆர்.வி.நடுநிலைப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு அரியலூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் புகழேந்தி வரவேற்புரையாற்றினார். தீயணைக்கும் வழிமுறைகள் பற்றி முன்னணி தீயணைப்பாளர் மனோகரன் மாணவ-மாணவிகளுக்கு செய்து காட்டினார். தொடர்ந்து மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள், வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தீயணைப்பாளர் ராஜா எடுத்துரைத்தார். இதில் தீயணைப்பு வீரர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com