தீ தடுப்பு ஒத்திகை

தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.
தீ தடுப்பு ஒத்திகை
Published on

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அனுசுயா உத்தரவின்பேரில் பேரிடர் அவசர கால முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பருவமழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், தீ விபத்து ஏற்படும்போது அதனை கட்டுப்படுத்தி தீயை அணைப்பது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட நிறுவனங்கள், அலுவலகங்களில் இருந்து மக்களை எவ்வாறு வெளியே கொண்டு வருவது என்பது பற்றி தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர்கள் பிரான்சிஸ், மைக்கேல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com