பெரியகுளம் அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை

பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
பெரியகுளம் அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை
Published on

பெரியகுளம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு முகாம், பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இதற்கு தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் குமரேசன் தலைமை தாங்கினார். அப்போது தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தீவிபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். அத்துடன் தீத்தடுப்பு ஒத்திகையிலும் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர். இதில், பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com