

வேலூர்,
வேலூர் கோட்டை மைதானத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டு இருந்த போது, விழா மேடையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. மின் கசிவு ஏற்பட்டதையடுத்து எல்.ஈ.டி திரை அணைக்கப்பட்டது.
மின் கசிவையடுத்து தீ விபத்து ஏற்படமல் இருக்க தீ அணைப்பான் பயன்படுத்தப்பட்டது. இதனால் மேடை முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. புகைமூட்டம் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் முதல் அமைச்சர் பழனிச்சாமி தனது உரையை நிறுத்தாமல் முழுவதுமாக பேசி முடித்தார்.