சென்னையில் மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து - முக்கிய கோப்புகள், கணினிகள் தீக்கிரை...!

சென்னையில் மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் பற்றிய தீயால் பல பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
சென்னையில் மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து - முக்கிய கோப்புகள், கணினிகள் தீக்கிரை...!
Published on

சென்னை,

சென்னை அண்ணாசாலை பகுதியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தால் மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் இருந்த 10 கணினிகள், முக்கிய கோப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீயில் ஏரிந்தது சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com