

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று காலை மின்சார கேபிளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டது. இதை பார்த்து நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, மின்சார கேபிளில் எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக அந்த கேபிள் பழுது பார்க்கப்பட்டது.
அவசர சிகிச்சை மையத்துக்கு உள்ளே செல்பவர்கள் தங்கள் காலணிகளை கழட்டி வைக்கும் அலமாரி மீது மின்சார கேபிள் உராய்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.