சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை
Published on

சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு சமயபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அதிகாரி பழனிச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் திடீரென பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டாலோ அல்லது தீ விபத்து ஏற்பட்டாலோ அதிலிருந்து பக்தர்களை எப்படி காப்பது என்பது குறித்து ஒத்திகையுடன் விளக்கினர். இதில் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள், தனியார் நிறுவன காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் மேலாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com