விருத்தாசலத்தில் பட்டதாரி ஆசிரியர் வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

விருத்தாசலத்தில் பட்டதாரி ஆசிரியர் வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலத்தில் பட்டதாரி ஆசிரியர் வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
Published on

விருத்தாசலம், அக்.12-

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட சாவடிக்குப்பம் பகுதியில் வசிக்கும் அருள்ஜோதி என்பவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார், அருள்ஜோதி வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் மாடியில் சோதனை செய்ததில், அங்கு பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அருள்ஜோதியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விருத்தாசலம் அருகே தொரவளூர் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருவதும், அனுமதி பெறாமல் வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், அருள்ஜோதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் வீட்டில் பதுக்கி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com