ரூ.14½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சரவெடி உள்பட ரூ.14½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ரூ.14½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
Published on

சிவகாசி,

சரவெடி உள்பட ரூ.14 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

சுற்றுச்சூழலை காரணம் காட்டி சரவெடிக்கு கடந்த 4 ஆண்டுகளாக உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு இந்த தடை உத்தரவை நீட்டித்துள்ளது.

இந்தநிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கும் சர வெடிகள் விற்பனை கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சில கடைகளில் சரவெடிகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகாசி தாசில்தார் வடிவேல் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் தடை செய்யப்பட்ட சரவெடிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

கிப்ட் பாக்ஸ்

இதில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையில் கிராம நிர்வாக அதிகாரி திடீர் சோதனை செய்த போது பெட்டி, பெட்டியாக 10 ஆயிரம் வாலா என்கிற சரவெடி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல் ஏராளமான கிப்ட் பாக்ஸ்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இந்த கடையில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டது தெரியவந்தது. இதை தெடர்ந்து ராமமூர்த்தி, பால முருகன் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோல் மற்றாரு கடையில் நடைபெற்ற சோதனையில் 3400-க் கும் மேற்பட்ட கிப்ட் பாக்ஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். மேலும் இந்த கடையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி கடையின் உரிமையாளர் திருப்பதி நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மீது சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com