

மதுரை,
மதுரையில் கப்பலூர் அருகே அமைந்துள்ள சுங்க சாவடியில் நாள்தோறும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். இந்த வழியே வந்த கார் ஒன்று சுங்க சாவடியில் நிறுத்தப்பட்டது.
ஆனால் காரில் வந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதில் ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் காரில் இருந்த இளைஞர் ஒருவர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அவரை அங்கிருந்த ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு அவரை காவல் துறையிடம் ஒப்படைத்னர். அவரிடம் திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன், காரில் தப்பி சென்ற நபர்களையும் தேடி வருகின்றனர்.